'கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது' - மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்

கேரளாவில் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
'கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது' - மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் இதில் கவலைப்படும் வகையில் எதுவும் இல்லை.

கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளாவில் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கப்பூர் விமான நிலையத்தில் 19 இந்திய பயணிகளுக்கு ஜே.என்.1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று உயர வாய்ப்புள்ளது."

இவ்வாறு வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com