ஜார்கண்ட் முதல்-மந்திரிக்கு கொரோனா பரிசோதனை

ஜார்கண்ட் முதல்-மந்திரிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
ஜார்கண்ட் முதல்-மந்திரிக்கு கொரோனா பரிசோதனை
Published on

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி மைலேஷ் தாகூர், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ. மதுரா மகாதோ ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சக மந்திரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், கடந்த 8-ந்தேதியில் இருந்து முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்தநிலையில் அவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரது மனைவி கல்பனா சோரன், ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத், மூத்த தனி செயலாளர் சுனில்ஸ்ரீனிவாஸ் மற்றும் முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com