பா.ஜ.க. முன்னாள் மந்திரி பங்கஜா முண்டேவுக்கு கொரோனா

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க. முன்னாள் மந்திரி பங்கஜா முண்டேவுக்கு கொரோனா
Published on

மும்பை,

முன்னாள் மந்திரியும், பா.ஜனதா தேசிய செயலாளருமான பங்கஜா முண்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அதில் அவர், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே முன்எச்சரிக்கையாக என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். நான் பலதரப்பட்ட மக்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தேன்.

அங்கு இருந்து எனக்கு தொற்று வந்து இருக்கலாம். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" என கூறியிருந்தார். தொற்றால் பாதிக்கப்பட்ட பங்கஜா முண்டேவுக்கு அவரை சட்டசபை தேர்தலில் தோற்கடித்தவரும், உறவினருமான மந்திரி தனஞ்செய் முண்டே விரைவில் குணமடைய வாழ்த்து கூறியுள்ளார்.

அதில் அவர், "நானும் 2 முறை தொற்றால் பாதிக்கப்பட்டேன். எனவே மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சையை தொடங்க வேண்டும். குடும்பத்தினருக்கும் சோதனை மேற்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com