

சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமரீந்தர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.