கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்.
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்.
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தினசரி பாதிப்பு 300-ஐ நெருங்கியுள்ளது. இதனால் சுகாதாரத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கர்நாடகத்தில் கொரோனாவின் 3 அலைகளிலும் நான் அதில் சிக்காமல் தப்பித்தேன். இந்த முறை அதில் மாட்டி கொண்டேன். லேசான காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை செய்தேன். இதில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com