

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1ஆம் முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தடுப்பூசி பேட நேரடியாக மருத்துவமனைகளுக்கே, தடுப்பூசி மையங்களுக்கே செல்வதற்கு பதில் COWIN ( www.cowin.gov.in ) என்ற அரசின் தளத்தில் அல்லது ஆரோக்ய சேது செயலியில் இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்துகெள்ள வேண்டும் என்ற விதிகெண்டு வரப்பட்டது. மாநில அரசுகளிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பொருத்து பயனாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவின் தளத்தை ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்த முயன்றதால் பல இடங்களில் இணையதள சேவை முடங்கியது.