கொரோனா தடுப்பூசிக்கு சில வாரங்களில் அனுமதி கிடைக்க வாய்ப்பு - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த சில வாரங்களில் அனுமதி கிடைக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்கு சில வாரங்களில் அனுமதி கிடைக்க வாய்ப்பு - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த சில வாரங்களில் அனுமதி வழங்கப்படலாம் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவில் மொத்தம் 9 கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் 6 கொரோனா தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. 3 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன.

கடந்த 4 நாட்களில் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்க மருந்து நிறுவனமான பைசரின் இந்திய நிறுவனம் ஆகியவை தங்களது தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பித்து உள்ளன.

அடுத்த சில வாரங்களில் சில தடுப்பூசி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம். இதுபற்றி முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. அதுபற்றி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் தான் முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com