

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை முன்னிட்டு நகர நிர்வாகம் இன்று முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, நகரில் மளிகை, காய்கறி, இறைச்சி, பால் விற்பனை கடைகள் தொடர்ந்து திறந்து இருக்கும். எனினும் காலை 7 மணி முதல் 11 மணி வரையே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.