கொரோனா பாதிப்பு: தரையில் வட்டம் வரைந்து, கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட முதல் மந்திரி

மத்திய பிரதேச முதல் மந்திரி கடைகளின் முன் தரையில் வட்டம் வரைந்து கொரோனா விதிகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டு கொண்டார்.
கொரோனா பாதிப்பு: தரையில் வட்டம் வரைந்து, கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட முதல் மந்திரி
Published on

போபால்,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை கட்டுப்படுத்த மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நலையில், போபால் நகரில் முக கவசங்களின் அவசியம் பற்றி வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டார்.

என்னுடைய முக கவசம் என்னுடைய பாதுகாப்பு என்ற பெயரிலான இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, முக கவசம் அணிந்தபடி சந்தைகளில் உள்ள கடைகளின் முன் தரையில் அமர்ந்தபடி வட்டங்களை வரைந்து சமூக இடைவெளியை உறுதிப்படுத்தினார்.

இதன்பின் அவர் பேசும்பொழுது, ஒவ்வொருவரும் முக கவசங்களை அணிய வேண்டும் என நான் வேண்டி கேட்டு கொள்கிறேன். வசதியுள்ளவர்கள், வசதியற்றவர்களுக்கு முக கவசங்களை வினியோகிக்கும்படியும் நான் வேண்டி கேட்டு கொள்கிறேன்.

அரசும் முக கவசம் வழங்க முயற்சி எடுக்கும். மகளிர் சுய உதவி குழுக்கள் போர்க்கால அடிப்படையில் முக கவசங்களை தயாரிக்கும்படி நான் அவர்களிடம் கேட்டு கொண்டுள்ளேன். நிலைமை மோசமடைய விடமாட்டோம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com