

புதுடெல்லி,
ஆந்திரா, கர்நாடகா, டெல்லி மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஆந்திர மாநிலத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,88,869 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 735 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 8,80,972 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7,162 பேர் பலியாகி உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 12,265 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,45,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,27,150 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 5,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி மாநிலத்தில் இன்று புதிதாக 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6,36,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் 2 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 10,891 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து 6,25,024 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 1,031 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.