கொரோனா பாதித்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. ஒடிசாவில் உயிரிழப்பு

ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. உயிரிழந்து உள்ளார்.
கொரோனா பாதித்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. ஒடிசாவில் உயிரிழப்பு
Published on

புவனேஸ்வர்,

நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இருந்தவர் ரகுநாத் மொகபத்ரா. கடந்த வாரம் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் இவரை ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்து உள்ளார். அவர் நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர் ஆவார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com