கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது; உ.பி அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்று உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது; உ.பி அரசு அறிவிப்பு
Published on

லக்னோ,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உத்தர பிரதேசத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வுகள் கிடையாது எனவும் அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இல்லாமலேயே பாஸ் செய்யப்படுவார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2 ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு உத்தர பிரதேச அரசு விடுமுறை அளித்துள்ளது கவனிக்கத்தக்கது. அதேபோல், போட்டித்தேர்வுகள் உள்பட பிற தேர்வுகளும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com