கொரோனா நோயாளியை சுற்றி 10 அடி தூரத்துக்கு வைரஸ் இருக்கும்; சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 3 அடி முதல் 6 அடி தூரம் வரை சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
கொரோனா நோயாளியை சுற்றி 10 அடி தூரத்துக்கு வைரஸ் இருக்கும்; சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வில் கண்டுபிடிப்பு
Published on

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை சுற்றிலும் 10 அடி தூரத்துக்கு கொரோனா வைரஸ் கலந்திருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் இத்தகவலை தெரிவித்தார்.

கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அவர் கூறியதாவது:-

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனிநபரை சுற்றிலும் 10 அடி தூரத்துக்கு கொரோனா வைரஸ் காற்றில் கலந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், காற்று வீசும் தன்மையை பொறுத்து, தூசுப்படலத்தில் படிந்துள்ள கொரோனா வைரஸ் இன்னும் நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே, காற்று வழியாக கொரோனா தாக்கும் வாய்ப்பை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவது நல்லது.

இவ்வாறு அவர் கூறினா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com