கொரோனா நோய் பாதிப்பு மே மாதம் உச்சம் அடையும் ; செப்டம்பர் மாதம் குறையும்

கொரோனா நோய் பாதிப்பு மே மாதம் உச்சம் அடையும் என்றும் செப்டம்பர் பூஜ்யமாக குறையும் என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நோய் பாதிப்பு மே மாதம் உச்சம் அடையும் ; செப்டம்பர் மாதம் குறையும்
Published on

புதுடெல்லி

இந்தியாவில் கெரேனா நேய் பாதிப்பு மே மாதம் மத்தியில் உச்சகட்டத்தை அடைந்து படிப்படியாக பாதிப்பு குறையும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

சர்வதேச நிறுவனமான புரேடிவிட்டியுடன் சேர்ந்து டைம்ஸ் பத்திரிகை குழுமம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, இத்தாலியில் நேரிட்ட பாதிப்பை அடிப்படையாக கெண்ட சதவீத மதிப்பீடு உள்ளிட்ட 3 மாதிரிகளை கணக்கில் கெண்டு முடிவை வெளியிட்டுள்ளது. அதில் மே மாதம் 22 ஆம் தேதி இந்தியாவில் கெரேனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் முன்னேற்றத்தை கணிக்க குழு மூன்று மாதிரிகளை உருவாக்கியது. ஒவ்வொரு மாதிரியும் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் எவ்வாறு கொரோனா பரவும் என்பதற்கான மதிப்பீட்டை வழங்கியது. நெருக்கடிக்கு அரசாங்கமும் சுகாதார உள்கட்டமைப்பும் எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கான வழிகளை வழங்கின.

மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பாதிப்பு பூஜ்யமாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும், மே 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டால், ஜூன் மாத மத்தியில் பூஜ்யமாக குறைய வாய்ப்புள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com