கொரோனா பாதிப்பு: மத்திய அரசின் உதவியை கோரியுள்ளோம்- கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா தகவல்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி திருச்சூர் மருத்துவமனையில் உள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் கேரள அமைச்சர் ஷைலஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
கொரோனா பாதிப்பு: மத்திய அரசின் உதவியை கோரியுள்ளோம்- கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா தகவல்
Published on

திருவனந்தபுரம்,

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி திருச்சூர் மருத்துவமனையில் உள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள அமைச்சர் ஷைலஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்பேது, அவர், நிலைமையை அரசு கூர்ந்து கவனித்து வருவதாகவும், திருச்சூரில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுபேல, கேரளாவில் அனைத்து மருத்துவ கல்லூரிகளில் தனிப்பிரிவு ஏற்படுத்த உள்ளதாகவும் பெதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறினார். அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை மையங்கள் அமைத்துள்ளதாகவும், வுகானிலிருந்து திரும்பிய 106 பேரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவுத் அமைச்சர் ஷைலஜா கூறினார். மத்திய அரசின் உதவியை கேரியுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com