திக்விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கு கொரோனா தொற்று

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திக்விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கு கொரோனா தொற்று
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், 'கொரோனா பரிசோதனையில் இன்று காலை எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அரியானா மாநில பேரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு கடந்த 2009 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். அரியானா மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஆவார். தற்போது கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

சிரோமணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதலுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com