ராஜஸ்தான் வந்த இத்தாலி சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ராஜஸ்தான் வந்த இத்தாலி சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் வந்த இத்தாலி சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
Published on

ஜெய்ப்பூர்,

இத்தாலியை சேர்ந்த ஒருவர் ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்திருந்தார். இங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 29-ந் தேதி கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நோய் தொற்று எதுவும் இல்லை என தெரியவந்தது.

ஆனாலும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. எனவே நேற்று மீண்டும் வைரஸ் தொற்று பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு 2 பரிசோதனையிலும் வெவ்வேறு முடிவுகள் கிடைத்ததால், வைரஸ் பாதிப்பை உறுதி செய்வதற்காக அவரது ரத்த மாதிரி நேற்று புனேயில் உள்ள தேசிய வைரஸ் பரிசோதனை மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இத்தாலி சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com