“கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது” - அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
“கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது” - அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும், யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொது முடக்க தளர்வுகளுக்குப் பின்னர், கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளது. ஆனாலும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. லேசான கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 3,314 பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் மொத்த பாதிப்பில் 6,540 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6,617 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா சிகிச்சைக்காக இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் 2,000 புதிய படுக்கைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com