

புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், ஊரடங்குக்கு பிறகு அன்றாட கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், தினசரி பெட்ரோல், டீசல் விலையும் உயர்வதை ஒப்பிட்டு ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.
அதில், உயர்வது, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மட்டுமல்ல. பெட்ரோல், டீசல் விலையும்தான். கொரோனாவையும், பெட்ரோல், டீசல் விலையையும் மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று கூறியுள்ளார்.