இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது.
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2547-ல் இருந்து 2,902- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ல் இருந்து 68 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 163-ல் இருந்து 184 ஆக உயர்ந்துள்ளது. மாநில வாரியாக, அதிகபட்சமாக மராட்டியத்தில் 423- பேருக்கும் தமிழகத்தில் 411 -பேருக்கும், டெல்லியில் -386 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com