

புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று வரை 166 ஆக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ள செய்தியில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 12 மணிநேரத்தில் 30 பேர் உயிரிழந்து உள்ளனர். 547 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 199 பேர் பலியாகி உள்ளனர். 5,709 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.