கேரளாவில் இன்று 4,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 4,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்து 99 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 40 ஆயிரத்து 546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com