

புதுடெல்லி,
கேரள முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் ஆகியோருக்கு எதிரான வழக்கில், மாநில அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத்தடை விதித்துள்ளது.
சி.எம்.ஆர்.எல். என்ற தனியார் நிறுவனம், பினராயி விஜயனின் மகள் வீணாவின் 'எக்ஸாலாஜிக்சொலூசன்ஸ்' என்ற மென்பொருள் நிறுவனத்துக்கு ஆலோசனைசேவை என்ற பெயரில் எந்தவொரு சேவையும் பெறாமல் முறை கேடாக ரூ.2.78 கோடி பணப்பட்டுவாடா செய்த தாகஅமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
பினராயி விஜயன் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் அரசு ரீதியாக அளிக்கப்பட்ட சலுகைகளுக்காக இந்த லஞ்சப் பணம் கைமாறியதாக வழக்கறிஞர் கே.எம். ஷாஜகான் என்பவர் அளித்தபுகாரின் அடிப்படையில்வழக்கில்விசா ரணை நடத்த அனுமதி வழங்கி கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்ஜாய் மால்யாபக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போதுநீதிபதிகள், "உரியசட்டநடைமுறைகளைப் பின்பற்றாமல் அவசரமாக விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்? முன்னாள் முதல்-மந்திரிக்கு எதிரான வழக்கில் உரியமுன்அனுமதி இல்லாமல் எவ்வாறு விசாரணையைத் தொடர முடியும்?" என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணைக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்படுவதாகவும், இந்த இடைப்பட்டகாலத்தில் வழக்கில் நிவாரணம் கோரி ஐகோர்ட்டை அணுகவும் பினராயிவிஜயன்தரப்புக்கு அனுமதி அளித்தனர்.