கணவன் கண்முன்னே இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்; அதிர்ச்சி சம்பவம்

கருணை போலீசார் தப்பியோடிய தீவிரமாக தேடி வருகின்றனர்.
கணவன் கண்முன்னே இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்; அதிர்ச்சி சம்பவம்
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் சாகிப் மாவட்டம் பெடி கார்டன் காலனி பகுதியை சேர்ந்த இளம்பெண் ரூபி மேஹ்ரா. இவருக்கும் அனுஷ் கொவர் என்ற இளைஞருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இதனிடையே, திருமணத்திற்குமுன் ரூபிக்கும் அவர் குடியிருந்த பகுதியில் வசித்து வந்த கரண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ரூபியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கரண் வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரூபி கரணுடனான பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இதன் பின்னர், ரூபிக்கும் அனுஷ் கொவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், ரூபியும் தனது கணவர் அனுஷ் கொவரும் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்கூட்டரில் சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது, இருவர் சென்ற ஸ்கூட்டரை பைக்கில் வந்த கரண் இடைமறித்துள்ளார். பின்னர், அனுஷ் கொவருடனும், ரூபியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, ரூபியின் கணவர் அனுஷ் கொவரை கருண் தாக்க முயன்றார். இதனால் கருணை தடுக்க ரூபி முயன்றுள்ளார். அப்போது, தான் மறைத்து கொண்டு வந்த துப்பாக்கியால் ரூபியை கருண் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் தலையில் படுகாயமடைந்த ரூபி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து, கருண் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார்.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ரூபியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கருணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com