கடந்த 9 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் இந்தியா அமோக வளர்ச்சி - மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்

கடந்த 9 ஆண்டுகளில் தாழில்நுட்ப முன்னேற்றங்களில் இந்தியா அமோக வளர்ச்சி கண்டிருப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மே 11-ந் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், புவி அறிவியல், விண்வெளி, அணுசக்தி ஆகிய துறைகளின் உயர்மட்ட கூட்டுக்குழு கூட்டம் நடந்தது.

அதில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டார். தேசிய தொழில்நுட்ப தினத்தை கொண்டாடுதல், அறிவியல் ஊடக தாடர்பு பிரிவை உருவாக்குதல், திட்டங்களில் தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனத்துக்கான வயது வரம்பை தளர்த்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சீர்திருத்தங்கள்

இக்கூட்டத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் பேசியதாவது:-

கடந்த 9 ஆண்டுகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் இந்தியா அமோக வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கு நரேந்திர மோடி அரசு மேற்காண்ட முக்கியமான சீர்திருத்தங்கள்தான் காரணம்.

இந்த ஆண்டு, அனைத்து அறிவியல் அமைச்சகங்களும், துறைகளும் மே 11-ந் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடும்.

தொழில்நுட்ப ஜாம்பவான்கள், ஆராய்ச்சியாளர்கள், என்ஜினீயர்கள் ஆகியோர் படைத்த சாதனைகளை தேசிய தொழில்நுட்ப தினம் எடுத்துச் சொல்லும். தேசிய தொழில்நுட்ப தினத்தின் கருப்பொருளாக 'அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம்' இருக்கும் என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com