மர்மமான முறையில் இறந்து கிடந்த தம்பதி - போலீசார் விசாரணை

லக்கிம்பூர் கேரியில் மர்மமான முறையில் தம்பதி இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மர்மமான முறையில் இறந்து கிடந்த தம்பதி - போலீசார் விசாரணை
Published on

லக்கிம்பூர் கேரி,

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வியாழக்கிழமை மர்மமான முறையில் தம்பதி இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் கண்ணாபூர் கிராமத்தைச் சேர்ந்த பகவுதி பிரசாத் தீட்சித் (50) மற்றும் அவரது மனைவி ராம்ரதி தேவி (45) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

தேவி ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கிடந்த நிலையில், பிரசாத் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து உயிரிழந்தவரின் இரத்தக் கறை படிந்த இரும்பு கம்பி மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக தேவி இறந்ததாகவும், பிரசாத் தூக்கிலிடப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கில் அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியை தாக்கியதாக, உயிரிழந்த தம்பதியினரின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும், இது கொள்ளை முயற்சி இல்லையென்றும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com