லஞ்சப் புகார்: டிஎஸ்பி தேவேந்தர் குமாரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி

சிபிஐ லஞ்சப் புகாரில் டிஎஸ்பி தேவேந்திர் குமாரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியது.
லஞ்சப் புகார்: டிஎஸ்பி தேவேந்தர் குமாரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி
Published on

புதுடெல்லி,

இறைச்சி வியாபாரி மொயின் குரேஷி மீதான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. மொயின் குரேஷியிடம் இருந்து தரகர் வழியாக ராகேஷ் அஸ்தானா ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என புகார் எழுந்தது. புகாரின் பேரில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்தது.

முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் நேற்று அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பான சி.பி.ஐ. மனுவை நீதிபதி சந்தோஷ் சினேகி மான் விசாரித்து, தேவேந்தர் குமாரை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com