கோர்ட்டுகளில் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை முடிவு குறித்து வழக்கு தொடர முடியாது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

கோர்ட்டுகளில் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை முடிவு குறித்து வழக்கு தொடர முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
கோர்ட்டுகளில் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை முடிவு குறித்து வழக்கு தொடர முடியாது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
Published on

புதுடெல்லி,

சமூக ஆர்வலர் கல்பனா மேத்தா மற்றும் பெண்கள் சுகாதார தொண்டு நிறுவனம் ஒன்று ஆகியவற்றின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை முடிவுகள் தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திர சூட், அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு கூறியதவாது:-

குடிமக்களின் நலன்களை பாதுகாப்பதற்கான இலக்குகளை அடையவேண்டும் என்றால் மனுதாரர்கள் நாடாளுமன்ற

நிலைக்குழு அறிக்கைகளை சார்ந்தே இருக்க வேண்டும். கோர்ட்டின் நடைமுறைகள் நாடாளுமன்றத்துக்கு உள்ள உரிமைகளின் மீது எந்த வகையிலும் மோதுவதாக இருக்கக் கூடாது. நீதித்துறைக்கும், சட்ட நிர்வாகத்துக்கும் ஜனநாயகத்தில் சம உரிமை அளிக்கப்பட்டு உள்ளது.நாடாளுமன்ற நிலைக்குழு குழுவின் அறிக்கைகள் பற்றி கோர்ட்டுகளால் சட்டவிதிமுறைகளின் விளக்கம் மட்டுமே கோர முடியும். அதேநேரம் இந்த அறிக்கை குறித்த உண்மைத்தன்மை, உள்ளடக்கம், கருத்து, முடிவு பற்றி கோர்ட்டுகளில் யாரும் கேள்வி எழுப்பவோ, வழக்கு தொடரவோ முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com