மராட்டிய மந்திரி நவாப் மாலிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பணமோசடி வழக்கில் நவாப் மாலிக்கை கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
மராட்டிய மந்திரி நவாப் மாலிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Published on

மும்பை,

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

மேலும், நவாப் மாலிக் மீது பணமோசடி புகார்களும் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், பணமோசடி வழக்கில் நவாப் மாலிக்கை கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நவாப் மாலிக் தற்போது நீதிமன்றக் காவலில் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது நீதிமன்றக் காவல் முடிந்ததையடுத்து இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நவாப் மாலிக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனக்கு உடல் உபாதைகள் அதிகரித்து இருப்பதாக நீதிபதியிடம் நவாப் மாலிக் முறையிட்டார். எனினும், அவரது நீதிமன்றக் காவலை வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com