’நீதிமன்றங்கள் தலையிட முடியாது’: வேட்புமனு நிராகரிப்பு வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு

தேர்தல் நடைமுறைகள் இருக்கும் போது நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
’நீதிமன்றங்கள் தலையிட முடியாது’: வேட்புமனு நிராகரிப்பு வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

வேட்புமனு நிராகரிப்பு

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்தியப் பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஒருசில காரணங்களால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மீனாட்சி நடராஜன், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, “தேர்தல் நடைமுறைகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது” என்று தெரிவித்தது. அத்துடன், காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

மேலும், தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்டப்படி தீர்வு காண வேண்டுமெனில், தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் வழக்கு (Election Petition) மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு, தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்ற தலையீட்டின் வரம்புகள் குறித்து மீண்டும் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com