

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து வினியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.
இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்த நாளில் இருந்து 12 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம் என மத்திய அரசின் கீழ் செயல்படுகிற மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதை பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.