இந்தியாவில் புதிதாக 906 பேருக்கு கொரோனா பாதிப்பு: தொற்றால் 20 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 906 பெருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று கொரோனா தினசரி பாதிப்பு சற்றே அதிகரித்தது. நேற்று முன்தினம் 656 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 1,021 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 906 பெருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 84 ஆயிரத்து 058 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தொற்று பாதிப்பில் இருந்து 2,100 பேர் குணம் அடைந்தனர். தொற்றில் இருந்து இதுவரையில் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்க 4 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 065 ஆக உயர்ந்தது.

கொரோனாவுக்கு நேற்று 4 பேர் பலியாகினர். இன்று 20 பேர் உயிரிழந்தார். இதில் கேரளாவில் விடுபட்ட கொரோனா பலிகளில் 7-ஐ கணக்கில் சேர்த்ததும் அடங்கும். இதுவரை தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 814 ஆகும்.

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் இன்று 1,214 குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி, கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 179 ஆக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com