கேரளாவில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 46,387 பேருக்கு தொற்று..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,387 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 46,387 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 15,388 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,99,041 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 309 பேர் (இன்று மட்டும் 32 பேர்) உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் கொரோனா புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உயிரிழப்புகள் இன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com