இந்தியாவில் மேலும் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் மேலும் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

புதுடெல்லி,

கடந்த சில வாரங்களாகவே உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடுகள் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது தெற்றால் பாதிக்கப்பட்ட நேயாளிகளின் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கேரளாவில் ஓர் உயிரிழப்பும் பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com