பஞ்சாபில் வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கு ரத்து

பஞ்சாபில் கொரோனா தொற்று பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது.
பஞ்சாபில் வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கு ரத்து
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாபில் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாபில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

திரையரங்கு, மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளரங்கில் 100 பேர் மற்றும் வெளியரங்கில் 200 பேருடன் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கு, மதுபானக் கூடம், உணவகம், சலூன், உடற்பயிற்சி கூடங்கள் உள்பட அனைத்தும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com