கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது; காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது; காங்கிரஸ் குற்றச்சாட்டு
கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது; காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது நேற்று மக்களவையில் 2021-22-ம் ஆண்டுக்கான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்து விவாதம் நடந்தது.

அப்போது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மணீஷ் திவாரி மத்திய அரசு தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பதிலாக கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறது என குற்றம் சாட்டினார். இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.045 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளன என்றும் அதே நேரத்தில் 5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் தொடர்ந்து பேசுகையில் கொரோனா தடுப்பூசியின் ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் அரசு மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறது. தடுப்பூசி திட்டம் எதுவும் தெளிவாக இல்லை. அது முறையாக தொடங்கவில்லை. சுகாதார பணிக்கு அரசு குறைந்த கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு வரவு-செலவு திட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு திட்டத்துக்கு குறைந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com