தெலுங்கானாவில் இன்று மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தெலுங்கானாவில் இன்று அதிக அளவாக ஒரேநாளில் மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் இன்று மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஹைதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,14,483 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 872 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 86,095 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 27,600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com