ஆந்திராவில் இன்று ஒரேநாளில் மேலும் 7,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று ஒரேநாளில் மேலும் 7,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இன்று ஒரேநாளில் மேலும் 7,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் அதிக அளவாக ஒரேநாளில் மேலும் 7,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,297 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 58 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,148 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 3,064 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52,622 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 56,527 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com