டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 0.05 சதவிகிதமாக குறைந்தது

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 0.05 சதவிகிதமாக குறைந்தது
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களிலேயே பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்திலும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30- ஆக பதிவானது. தொற்று பாதிப்பு விகிதம் 0.05 சதவிகிதமாக குறைந்துள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 40 ஆயிரத்து 605- ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து 14.15- லட்சம் பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,095- ஆக நீடிக்கிறது. நடப்பு மாதத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆகும். நவம்பர் 12 ஆம் தேதி இருவரும் , 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தலா ஒருவரும் தொற்று பாதிப்பால் உயிரிழந்து இருந்தனர். அதன்பிறகு ஆறுதல் அளிக்கும் விதமாக இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com