கர்நாடகாவில் நேற்று புதிதாக 453 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை

கர்நாடகாவில் நேற்று புதிதாக 453 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் புதிதாக 453 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 49 ஆயிரத்து 636 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 316 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 947 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 31 ஆயிரத்து 725 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 5 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கர்நாடகத்தில் நேற்று 68 ஆயிரத்து 166 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1 கோடியே 85 லட்சத்து 62 ஆயிரத்து 530 பேருக்கு சோதனை நடந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com