

மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 3-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் மராட்டியத்தை சேர்ந்தவர்களாக உள்ளனா.
இந்தநிலையில் மாநிலத்தில் இன்று மேலும் 2,190 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56,948 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மாநிலத்தில் ஒரேநாளில் 105 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 17,918 பேர் குணமாகி உள்ளனர்.
மும்பையை பொறுத்தவரை இன்று மட்டும் புதிதாக 1,044 பேருக்கு பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,835 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மேலும் 32 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் மும்பையில் இதுவரை 1,097 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.