நாட்டில் இதுவரை 74.30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை தகவல்

நாட்டில் இதுவரை 74.30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை 74.30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (வியாழக்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 4,13,752 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 74,30,866 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 57,90,832 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 16,40,034 பேர் முன்களப் பணியாளர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தடுப்பூசி போடப்பட்ட 74,30,866 பயனாளிகளில் பீகாரில் இருந்து 4,48,903 பேர்களும், கேரளாவிலிருந்து 3,33,436 பேர்களும், கர்நாடகாவிலிருந்து 4,76,277 பேர்களும், மத்திய பிரதேசத்திலிருந்து 4,85,593 பேர்களும், மகாராஷ்டிராவிலிருந்து 6,00,456 பேர்களும், டெல்லியில் இருந்து 1,62,596 பேர்களும், குஜராத்தில் இருந்து 6,43,438 பேர்களும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 7,52,501 பேர்களும், மேற்கு வங்கத்திலிருந்து 4,49,649 பேர்களும், தமிழகத்தில் 2,11,762 பேர்களும் என்று தற்காலிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com