குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Image courtesy :Reuters/Representational Image
Image courtesy :Reuters/Representational Image
Published on

புதுடெல்லி

பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரல்ஹாத் ஜோஷி மற்றும் பிற பா.ஜ.க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனைகள் நடந்து வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் கூறி இருந்தார்.

தற்போது, டெல்லி எய்ம்ஸில் 2-6 வயது குழந்தைகள் மீது கோவாக்சின் சோதனைகள் நடந்து வருகின்றன.ஜூன் 7 ஆம் தேதி, டெல்லி எய்ம்ஸ் 2 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசிகளை ரிசோதிக்கத் தொடங்கியது. மே 12 அன்று, டி.சி.ஜி.ஐ பாரத் பயோடெக்கிற்கு இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது கோவாக்சின் கட்டம் 2, கட்டம் 3 சோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பிரிவுகளாக பிரித்து சோதனை நடத்தப்படுகிறது, இதில் ஒவ்வொரு வயதது பிரிவிலும் 175 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டாவது டோஸ் முடிந்த பிறகு ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்படும், இது குழந்தைகளுக்கு தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை தெளிவுபடுத்தும்.

கோவாக்சின் தவிர, சைடஸ் காடிலாவின் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கான சோதனைகளும் தற்போது நாட்டில் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com