இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சர்வதேச கொரோனா வைரஸ் குறும்பட விழாவில் பேசிய அவர், உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவில் கிடைக்கும். தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படுவதற்கும் முன்பாக தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு இந்தியா தயாராகி வருவதால், மத்திய சுகாதார அமைச்சகம் அதன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com