கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் நாளை முதல் அமல் - மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இனி மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் நாளை முதல் அமல் - மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை
Published on

பெங்களூரு,

கர்நாடக அரசு, பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. மேல்-சபையில் அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த பசுவதை தடை சட்டத்தை நாளை (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது.

இந்த சட்டத்தின்படி மாடுகளை கொல்ல முடியாது. விவசாயிகள் வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அதை கோசாலைகளில் விட்டுவிட வேண்டும். ஆனால் 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை.

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பசுவதை தடை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com