

திருவனந்தபுரம்,
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கேரளாவில் இடதுசாரிகளான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடது ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. மாநில முதல்-மந்திரியாக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளுக்கு இந்திய கம்யூனிஸ்டு இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள 4 மந்திரிகளுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.