2-வது முறை: கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்பு

2-வது முறையாக கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்றுக்கொண்டார்.
2-வது முறை: கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்பு
Published on

திருவனந்தபுரம்

கேரள முதல் மந்திரியாக பினராயி விஜயன் பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் ஆரிப் முகமது கான் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பினராயி விஜயனை தொடர்ந்து கே ராஜன், ரோஷி அகஸ்டின், கே கிருஷ்ணன் குட்டி, ஏ.கே.சசீந்திரன், அகமது தேவர்கோவில், ஆண்டனி ராஜு, வி.அப்துர் ரஹ்மான், ஜி.ஆர்.அனில், கே.என்.பாலகோபால், ஆர்.பிந்து, ஜே.சிஞ்சு ராணி, எம்.வி.கோவிந்தன், பி.ஏ.முகமது ரியாஸ், பி.பிரசாத், கே.ராதாகிருஷ்ணன், பி.ராஜீவ், சஜி செரியன், வி.சிவன்குட்டி, வி.என்.வாசவன் மற்றும் வீணா ஜார்ஜ் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

கேரள மந்திரி சபை பதவியேற்பு விழாவில், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com