இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் வரை உயர்வு

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் வரை உயர்வு
Published on

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டிய தனிநபர் அல்லாத நிறுவனங்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினரின் எண்ணிக்கை கடந்த 4 நிதி ஆண்டுகளில் 60 சதவீதம் உயர்ந்து ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது.

அதே போன்று ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் உயர்ந்து 81 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 80 சதவீதம் உயர்ந்து 6 கோடியே 85 லட்சமாக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com