

போபால்,
மத்தியபிரதேச காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், நேற்று பா.ஜனதா அலுவலகத்தில் பா.ஜனதாவினர் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ந்தனர். பெண்கள் உள்பட பலர் நடனமாடி உற்சாகமாக காணப்பட்டனர்.
ஒரு பெண் நிர்வாகி, முன்கூட்டியே தீபாவளி வந்து விட்டதுபோல் உணர்வதாக கூறினார். காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் உருவானதையே அவர் அப்படி தெரிவித்தார்