காஷ்மீரில் கூட்ட நெரிசல்; பக்தர்கள் 12 பேர் பலி

காஷ்மீரில் மாதா வைஷ்ணவ தேவி பவன் பகுதியருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
காஷ்மீரில் கூட்ட நெரிசல்; பக்தர்கள் 12 பேர் பலி
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவ தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் வந்து தேவி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். ஆங்கில புது வருட பிறப்பினை முன்னிட்டு மாதா வைஷ்ணவ தேவி பவன் பகுதியருகே கோவில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.

இதனால், மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு முன்னேறி சென்றுள்ளனர். இதில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. பலர் நெரிசலில் சிக்கி காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபற்றி சமூக சுகாதார மையத்தின் மருத்துவர் கோபால் தத் கூறும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் நாராயணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்த மற்றும் உயிரிழந்த நபர்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரவில்லை என கூறியுள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com